தாம்பரத்தில் அலைமோதும் கூட்டம்… ரயில் பயணிகள் அவதி!

தமிழகம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களில் பயணிகள் தொங்கிக் கொண்டு போகும் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகளின் காரணத்தால் ஆகஸ்ட் 3 முதல் 15 வரை சென்னை கடற்கரை-தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பல்லாவரம்-கூடுவாஞ்சேரி இடையிலான மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இதற்கு மாற்றாகத் தமிழக அரசு 70 சிறப்புப் பேருந்துகளை இயக்கிவருகிறது.

ஆகஸ்ட் 15 முதல் மின்சார ரயில் சேவைகள் வழக்கம்போல் தொடங்கப்படும் என்று மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,பராமரிப்பு பணிகள் முடிவடையாத காரணத்தால் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை மேலும் மூன்று நாட்களுக்கு, சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில், மின்சார ரயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் ஆகஸ்ட் 12-தேதி அறிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையில்தான், தாம்பரம் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு காத்திருக்கும் பயணிகள் ரயில் வந்த உடன் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறிச் சென்றனர். இளைஞர்கள் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர்.

 

இன்றும் தாம்பரம் – கடற்கரை, தாம்பரம் – கூடுவாஞ்சேரி செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

இதனால் பராமரிப்பு பணியை விரைவில் முடித்து ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எங்களை காப்பாற்றுவது யார்?: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு!

ஆவணி மாத நட்சத்திர பலன்: திருவாதிரை (17.8.2024 முதல் 16.9.2024 வரை)

தவறு செய்தால் நரகமா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *