தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!- முழு விவரத்தைப் பாருங்க…

Published On:

| By Aara

தற்போது மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் – நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூன் மாதம் வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயிலானது (06012)  வரும் ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

அதேபோல், தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயிலானது (06011) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மேலும் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூன் மாதம் வரை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவும் தற்போது நடைபெற்று வருகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒடிசாவை கொள்ளையடிக்கும் தமிழக கான்ட்ராக்டர்கள்: மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஸ்மிருதி இரானி

மே 30 வரை ஏற்காடு மலர் கண்காட்சி நீட்டிப்பு!

கிச்சன் கீர்த்தனா சண்டே ஸ்பெஷல்: உயிருள்ள ஊறுகாய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel