தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் பேருந்து மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தாம்பரம் பகுதியில் இருந்து குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை நோக்கி தனியார் சினிமா நிறுவன பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த பேருந்தானது தாம்பரம் காந்தி சாலை சிக்னல் சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கார் மீது அடுத்தடுத்து மூன்று கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் விபத்து ஏற்படுத்திய கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் இருந்த மூன்று நபர்கள் வெளியேறினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ஜிஎஸ்டி சாலை சுங்கச்சாவடி போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். லாரி மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு காரில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
கார் தீப்பிடித்து எரிந்ததால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செல்வம்
துருக்கி: 90 பேரின் உயிரை பறித்த நிலநடுக்கம்!
மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!