சாதாரண பொருட்களைக் கொண்டு வித்தியாசமான உணவு வகைகளை செய்து கொடுக்க நினைப்பவர்கள் நம்மில் பலருண்டு. ஆனால், செய்வதற்குத்தான் கொஞ்சம் தயங்குவார்கள். அந்தத் தயக்கத்தை உடைக்க இந்த புளி அவல் ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
திக்கான அவல் – ஒரு கப்
சற்று கெட்டியாக கரைத்த புளிக்கரைசல் – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
வறுத்த வேர்க்கடலை – கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுந்து – கால் டீஸ்பூன்
பூண்டுப்பல் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பூண்டுப்பல்லைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கழுவி சுத்தம் செய்த அவலை, ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து புளிக்கரைசலில் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை, கடலைப்பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலையை சேர்த்துச் வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூளைச் சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள அவல் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து வதக்கலாம். சுவையான புளி அவல் ரெடி.