Sweet Somas Recipe in Tamil

கிச்சன் கீர்த்தனா: சோமாஸ்

தமிழகம்

இன்றைய தலைமுறையினர் பலருக்கு சோமாஸ் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் வீட்டிலேயே சுவையான சோமாஸ் செய்து தீபாவளி பண்டிகையை அசத்த இந்த ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

மேல் மாவுக்கு…

மைதா – ஒரு கப்
நெ‌ய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பூரணம் செய்ய…
ரவை – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
முந்திரி – 10
உலர்ந்த திராட்சை – 20
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கசகசா – ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பூ – ஒரு கப் (விருப்பமானால்)
எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மைதா மாவுடன் நெ‌ய், உப்பைக் கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாக பூரி மாவுப் பதத்துக்குப் பிசைந்து மூடி வைக்கவும். பூரணம் செய்ய: வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, திராட்சையைச் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும். அதே வாணலியில் ரவையைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இத்துடன் கசகசா சேர்க்கவும். தேங்காய்ப்பூ சேர்ப்பதாக இருந்தால் சிறிது நெய்விட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும். இவற்றுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொ‌ள்ளவு‌ம். பூரணம் தயார்.

மாவிலிருந்து சிறு உருண்டை அளவுக்கு எடுத்து பூரிக்குத் தேய்ப்பதுபோல் தேய்த்து, தேவையான பூரணத்தை மாவின் நடுவே வைக்கவும். மாவின் ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி அழுத்தி ஓரங்களை மடித்துக்கொள்ளவும். அல்லது சோமாஸ் கட்டரினால் ஓரங்களை கட் செய்துகொள்ளவும். இது போல எல்லா மாவையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து மிதமான சூட்டில் சோமாஸை ஒவ்வொன்றாகவோ (அ) சட்டி எவ்வளவு பிடிக்குமோ அந்தளவுக்குச் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மகிழம்பூ முறுக்கு!

கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: உங்கள் வீட்டில் ‘ஹேப்பி குக்கிங்’ அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!

விஜய் மாநாட்டில் கவனம் ஈர்த்த தொகுப்பாளினி: யார் இவர்?

தீபாவளி ஆஃபரா? பொங்கல் ஆஃபரா? – அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0