இந்தப் பருவத்தில் அதிகம் விளையக்கூடிய, பலரால் ஒதுக்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் சத்துகளை அளித்து உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவும் இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாட், வட மாநிலங்களில் குளிர்காலத்தில் விற்கப்படும் பிரபலமான சாட்.
என்ன தேவை?
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 250 கிராம்
சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் பதம் வேகவைத்து, தோலுரித்து சதுரங்களாக துண்டுகள் போடவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் தூவி பிசிறிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிழங்கு துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பிறகு எடுத்து, சாட் மசாலாத்தூள் தூவி பரிமாறவும்.