கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் ஃகார்ன் பசலை பிரெட்

Published On:

| By Selvam

sweet corn pasalai bread

அவசரத்துக்கு உதவும் பிரெட்டில் சத்தான பொருட்களையும் சேர்த்து சுவையான சிற்றுண்டியாக்க இந்த ரெசிப்பி உதவும்.  ஆரோக்கியமான  உணவாகவும் இருக்கும். நாள் முழுக்க புத்துணர்ச்சித் தரும். 

என்ன தேவை?

ஸ்வீட்ஃகார்ன் – அரை கப்
பிரெட் ஸ்லைஸ்கள் – 4
பசலைக்கீரை – அரை கப்
பெரிய வெங்காயம் – அரை கப்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பசலைக்கீரை மற்றும் வெங்காயத்தைக் கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருக்கி வேக வைத்த ஸ்வீட் கார்னைச் சேர்த்து வதக்கவும். இத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பசலைக்கீரையைச் சேர்த்து நிறம் மாற நன்கு வதக்கவும். இதில் போதுமான அளவு மிளகுத்தூள், உப்பைச் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். பிரெட்டை விருப்பம் உள்ளவர்கள் டோஸ்ட் செய்துவிட்டு அதன் ஓரங்களை நீக்கிக் கொள்ளவும். விரும்பாதவர்கள் ஃப்ரெஷ் பிரெட்டை உபயோகிக்கவும். இனி பிரெட்டின் உள்ளே வதக்கிய கலவையை வைத்து மற்றொரு பிரெட்டால் மூடி சாண்ட்விச் போல சாப்பிடலாம்.

குறிப்பு: நேரம் இல்லாதர்கள் இரவே ஸ்வீட் கார்னை வேக வைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். குக்கரில் வேக வைத்தால்தான் கார்ன் உப்பலாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel