எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்திச் செய்யாத ஆரோக்கிய உணவுகளில் ஒன்று டோக்ளா. குஜராத் மாநிலத்தின் உணவான டோக்ளாவின் சுவையும் நன்மையும் மற்ற மாநிலத்தவரையும் கவர்ந்திழுக்க, இப்போது பரவலாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் டோக்ளாவை நீங்களும் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
கடலை மாவு – 250 கிராம்
தயிர் – அரை கப்
தண்ணீர் – அரை கப்
சமையல் சோடா – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் – 1 அல்லது 2 (விழுதாக அரைக்கவும்)
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
கடுகு – 10 கிராம்
கறிவேப்பிலை – 10 இலை
துருவியத் தேங்காய் – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
தயிரில் சிறிது தண்ணீரைக் கலந்து, கட்டியில்லாமல் கரைத்து, கடலை மாவைச் சேர்த்து, கட்டி சேராமல், இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து சமையல் சோடா சேர்த்து, ஒரு மணி நேரம் தனியாக வைக்கவும்.
பிறகு, இ்க்கலவையில் எலுமிச்சைச்சாறு, உப்பு, சர்க்கரை, பச்சைமிளகாய் விழுது, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி, இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வேகவைத்து, ஆறவைத்து துண்டு போடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்தவற்றை போட்டு தாளித்து, டோக்ளா மீது ஊற்றினால், டோக்ளா ரெடி.