withdraw old neet ban pettition

நீட் விலக்கு: தமிழக அரசின் புதிய மனு மீது விரைவில் விசாரணை

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று(பிப்ரவரி 24) உத்தரவிட்டுள்ளது.

இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதில் இருந்து பல்வேறு எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கடந்த 2021ஆம்ஆண்டு சட்டசபையில், நீட் தேர்வில் இருந்து விலக்குக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் அந்த மசோதாவை தமிழ்நாடு அரசுக்குத் திரும்ப அனுப்பினார் ஆளுநர்.

இதனையடுத்து 2வது முறையாகத் தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்விற்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். மேலும் நீட் தேர்வு ரத்துகுறித்து மத்திய அரசு எழுப்பிய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசு பதில் அளித்திருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் புதியமனுவைத் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், நீட் தேர்வு நடத்துவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கூட்டாட்சி கொள்கையை மீறுவதாகவும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகவும் உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும். மேலும் இது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் நீட் தேர்வு ரத்து குறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மோனிஷா

அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்

ஜெயலலிதா பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய எடப்பாடி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts