ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவு!
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. supreme court Order to grant permission to RSS rally
விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்,
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி அக்டோபர் 16 ஆம் தேதி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
ஆனாலும் அனுமதி வழங்கப்படாததால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
இந்தசூழலில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு இன்று (நவம்பர் 6), நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனுமதி கேட்ட வழித்தடங்களில் பல மசூதிகள் உள்ளன.
22 மற்றும் 29 ஆம் தேதிகளில் சில சமூங்களின் கொண்டாட்டங்களும் இருந்தன. அதனால் மோதல்கள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
வேறு தேதியை அவர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்” என்று வாதிட்டார்.
இதையடுத்து நவம்பர் 19 அல்லது நவம்பர் 26 ஆகிய இரண்டு தேதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணியை நடத்த பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் பேரணி நடத்த அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், “நவம்பர் 15ஆம் தேதிக்குள் பேரணிக்கான தேதி மற்றும் பாதை ஆகியவற்றை இறுதிசெய்து அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். supreme court Order to grant permission to RSS rally
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை எப்போது?
வைரலான ராஷ்மிகாவின் போலி வீடியோ… மத்திய அமைச்சர் வார்னிங்!
செந்தில் பாலாஜிக்குக் காவல் நீட்டிப்பு : அமலாக்கத் துறைக்கும் உத்தரவு!