தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில், இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது. ஒரு பென்ஷன் விவகாரத்தில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து அது நிறைவடைந்துவிட்ட போதிலும் மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது.
இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல” எனக் கூறி ரூ.5 லட்சம் அபராதத்துடன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், 4 வாரத்தில் அபராத தொகையை உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
ஜெ.பிரகாஷ்