மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கு அவர்களையும் அறியாமல் கண்கள் செருகி தூக்கம் வரும். குறிப்பாக வேலை செய்யும் இடத்தில் இதைக் கட்டுப்படுத்த முடியாது… இதற்கான காரணம் என்ன… தீர்வு உண்டா?
“இரவு நேரத்தில் முழுமையாகத் தூங்க முடியாததன் விளைவாகவும் இருக்கலாம். வயிறு முட்ட சாப்பிடுவதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் காலையில் 8.30 மணி அளவில் காலை உணவை எடுத்துக் கொண்டு, 11.30 மணி அளவில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் பழங்கள் தவிர்த்து வெறும் காய்கறிகள் மட்டும் சாப்பிடலாம். பச்சைக் காய்கறிகள் சாப்பிடப் பிடிக்காதவர்கள், காய்கறிகள் சேர்த்து செய்த பொரியல், கூட்டு சாப்பிடலாம். இதன் மூலம் மதிய நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவு குறையும்.
உடல் எடை அதிகமுள்ளோர் சோறு, இட்லி, தோசை போன்றவற்றை அதிகம் சாப்பிடாமல், பாதி அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்னொரு பாதி அளவு காய்கறிகள், கீரை சாப்பிடுவதுதான் சரியானது. அப்படியும் தூக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை என்றால், சாப்பிட்டு முடித்ததும் குளிர்ச்சியான இடத்தில் சிறிது நேரம் நடக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்யக்கூடாது என்பதுதான் சரி. ஆனால் தூக்கத்தைத் தவிர்ப்பதற்காக சில நிமிடங்கள் மட்டும் இப்படி நடந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பின்பற்றலாம்.
அதன் பிறகு பகலில் தூங்கும் வழக்கம் தானாக மாறிவிடும். இரவிலும் தூக்கம் தடைப்படாது. ஆழ்ந்து உறங்கலாம்.
காலை உணவை சாப்பிட்டுவிட்டு, இடையில் எதையும் சாப்பிடாமல், நேரடியாக மதியத்துக்கு கார்போஹைட்ரேட் சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பகலில் நிச்சயம் தூக்கம் வரும். உங்களுடைய சொந்த அலுவலகம், வீடு என்றால் சாப்பிட்டதும் 20 நிமிடங்கள் நேரம் தூங்கலாம், தவறில்லை” என்கிறார்கள் பொது மருத்துவர்கள்.
’ஜப்பான்’ ட்ரெய்லரில் கார்த்தி காட்டும் குரல் வித்தை!
ICC WorldCup: சொதப்பிய வங்கதேசம்…. சுருட்டி வீசிய நெதர்லாந்து!
என்ன சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்க முடியலையா? இதோ சில உணவுகள்!