கிச்சன் கீர்த்தனா: சுண்டைக்காய் வற்றல்

Published On:

| By Monisha

வத்தக்குழம்பு என்றால் நினைவுக்கு வருவது சுண்டைக்காயாகத்தான் இருக்கும். இந்தக் கோடையில் மலிவாகக் கிடைக்கும் சுண்டைக்காய்களை வாங்கி வற்றல் போட்டு வைத்துக்கொண்டால் தேவையானபோது பயன்படுத்தி வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து வைக்கலாம்.

என்ன தேவை?

சுண்டைக்காய் – 100 கிராம்
தயிர் – ஒரு கப்
உப்பு – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

சுண்டைக்காய்களைக் கழுவி காம்பை நீக்கி விட்டு, ஒரு கல்லால் எல்லா சுண்டைக்காயையும் தட்டி, வெயிலில் காய வைக்கவும். காய்ந்த சுண்டைக்காய்களை, உப்பு மற்றும் தயிருடன் கலந்து ஒரு நாள் ஊற வைக்கவும். பின்னர் தயிரிலிருந்து எடுத்து வெயிலில் காய வைக்கவும். பிறகு மீதமுள்ள தயிரில் போடவும்.

இவ்வாறு தயிர் வற்றும் வரை ஊறவைத்து காயப்போடவும். சுண்டைக்காய்களை நன்றாக காய வைத்து எடுத்து வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்து தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். காய்ந்த சுண்டைக்காய்களை புளிக்குழம்பில் சேர்த்தால், நல்ல சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.

மோர் மிளகாய்!

மணத்தக்காளி வற்றல்!