தமிழ்நாடு முழுவதும் விடுமுறை தொடங்கியது!

தமிழகம்

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 29) முதல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே பொதுத்தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி துவங்கி மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

ஆனால் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ஆம் தேதிவரை தேர்வு நடத்தப்பட்டது.

அதேபோல் 4 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் நேற்று வரை (ஏப்ரல் 28) தேர்வு நடைபெற்றது. அதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் 2022-23 கல்வியாண்டின் பள்ளி கடைசி வேலை நாள் நேற்றுடன் முடிவடைந்தது.

இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப்ரல் 29) முதல் சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

மேலும் விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ரஜினிகாந்த் பங்கேற்ற என்.டி.ஆர் நூற்றாண்டு விழா!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *