sugarcane corporation Diwali bonus announcement

கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?

தமிழகம்

கூட்டுறவு‌ மற்றும்‌ பொதுத்துறை‌ சர்க்கரை ஆலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்‌களுக்கு 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 10) உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில்‌ 16 கூட்டுறவு மற்றும்‌ 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள்‌ உள்ளன.

கரும்பு விவசாயிகளின்‌ நலனை பாதுகாக்கவும்‌, சாகுபடி பரப்பை அதிகரிக்கவும்‌, சர்க்கரை ஆலைகளின்‌ செயல்திறனை அதிகரிக்கவும்‌, தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்‌ ஒரு பகுதியாக ஒவ்வொரு பருவத்திற்கும்‌ கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம்‌ செய்யும்‌ கரும்பு விலைக்கு மேல்‌ கூடுதலாக சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்‌ 2022-23 அரவைப்‌ பருவத்திற்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும்‌ தனியார்‌ துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு டன்‌ ஒன்றுக்கு ரூ.195 விகிதம்‌ வழங்குவதற்கு ஏதுவாக மொத்தம்‌ ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது‌.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில்‌,

முதல்வர் ஸ்டாலின்‌ 2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான மிகை ஊதியம்‌ மற்றும்‌ கருணை தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்‌.

அதன்‌ அடிப்படையில்‌ ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும்‌ கள்ளக்குறிச்சி – ॥ ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும்‌ மிகை ஊதியமாக 8.83% மற்றும்‌ கருணை தொகையாக 14.67% என மொத்தம்‌ 20% போனஸ்‌ வழங்கவும்‌,

மீதமுன்ள 14 கூட்டுறவு மற்றும்‌ 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.59% மற்றும்‌ கருணை தொகையாக 1.67%. என மொத்தம்‌ 10% போனஸ்‌ வழங்க‌வும் உத்தரவிட்டுள்ளார்.

இதன்‌ மூலம்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 16 கூட்டுறவு மற்றும்‌ 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 6,103 தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சென்னை வீரபத்ர கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி : சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *