கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி.. எது சிறந்தது?

தமிழகம்

வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் என்ன பலன்? நாட்டுச்சர்க்கரை சிறந்ததா, கருப்பட்டி சிறந்ததா? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எதை, எவ்வளவு பயன்படுத்தலாம்? – இப்படிப்பட்ட சந்தேகங்களுக்குத் தீர்வு என்ன?

“100 கிராம் வெள்ளைச் சர்க்கரையில், 398 கலோரிகள் இருக்கின்றன. அதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் மிகவும் குறைவு. வெள்ளைச் சர்க்கரை என்பது ரசாயனங்களின் மூலம் ப்ளீச் செய்யப்படுவது.

அப்படி நம் உபயோகத்துக்கு வரும் வெள்ளைச் சர்க்கரையில், அந்த ப்ளீச்சின் மிச்சங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு.

வெள்ளைச் சர்க்கரையில் சல்ஃபர் அளவும் அதிகம். அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைத் தவிர்ப்பதே நல்லது.

நாட்டுச்சர்க்கரைக்கென பிரத்யே மணமும் சுவையும் இருக்கும். வெள்ளைச் சர்க்கரையோடு ஒப்பிடும்போது நாட்டுச் சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் அதிகம்.

வெள்ளைச் சர்க்கரையா, நாட்டுச் சர்க்கரையா, கருப்பட்டியா எனக் கேட்டால், மூன்றில் கருப்பட்டிதான் சிறந்தது. பனையிலிருந்து எடுக்கப்படுவது கருப்பட்டி. இதில் கால்சியம் சத்து மிக அதிகம். அதாவது, 363 மில்லிகிராம் அளவு கால்சியம் இதில் இருக்கிறது. பாஸ்பரஸ் சத்தும் இதில் அதிகம்.

இந்த மூன்றிலுமே கலோரியின் அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனாலும், கருப்பட்டியில் மட்டும்தான் சத்துகள் அதிகம் என்பதால்தான் மற்ற இரண்டையும்விட அது சிறந்தது” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மேலும், “குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தும் அனைத்து உணவுகளிலும் கருப்பட்டி சேர்த்துக் கொடுத்துப் பழக்குவது ஆரோக்கியமானது.

அது முடியாத பட்சத்தில் நாட்டுச் சர்க்கரையாவது கொடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்கலாம். எதை, எவ்வளவு பயன்படுத்தலாம் என்பது அவரவர் வயது, உடல்நலம் ஆகியவற்றைப் பொறுத்தது.

குழந்தைப்பருவமா, விடலைப்பருவமா, பெரியவர்களா என்பதைப் பார்த்து உபயோகிக்க வேண்டும்” என்றும் கூறுகிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா : தூத்துக்குடி மக்ரூன்

கிச்சன் கீர்த்தனா: அஜீரணமா…  எந்த உணவை எடுத்துக்கொள்வது, எதைத் தவிர்ப்பது?  

+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.