thachankurichi jallikattu first price
இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு தச்சன்குறிச்சியில் இன்று (ஜனவரி 6) நடைபெற்ற நிலையில், அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் சுகந்த் முதல்பரிசாக பல்சர் பைக் தட்டிச்சென்றார்.
ஜனவரி மாதம் பிறந்தாலே பொங்கல் திருநாளுக்கான முன் தயாரிப்பும், பல்வேறு மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துவிடும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டிலும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற போட்டியை, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதில் முதலாவதாக விண்ணேற்பு அன்னை ஆலய காளையும், முருகன் கோயில் காளையும் அவிழ்த்துவிடப்பட்டன.
மொத்தம் 571 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், அவற்றை பிடிப்பதற்கு 247 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சிறந்த மாடுபிடி வீரர்!
மாலை 4 மணி வரை நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கிய ராயமுண்டான் பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் சுகந்த் முதல் பரிசாக பல்சர் பைக்கை வென்றார்.
அவருக்கு அடுத்தபடியாக 8 காளைகளை அடக்கி பல்லபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ராம் இரண்டாம் பரிசான சைக்கிள் வென்றார்.
சிறந்த காளை பரிசு!
அதேபோன்று நீண்ட நேரமாக களத்தில் நின்று வீரர்களை திணறடித்த காளையின் உரிமையாளரான கைக்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம்பிடித்த காளையின் உரிமையாளரான காவல் ஆய்வாளருக்கு அனுராதா இரண்டாம் பரிசு சைக்கிள் வழங்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நடுவானில் உடைந்த கதவு… போயிங் விமானத்தில் அலறிய பயணிகள் : நடந்தது என்ன?
கிளாம்பாக்கத்தில் உடனே மெட்ரோ பணி… : அன்புமணி வலியுறுத்தல்!
விராட், ரோஹித்தின் டி20 எதிர்காலம் இதுதான்!
thachankurichi jallikattu first price