சட்டென்று மாறிய வானிலை: சென்னையில் மழை!

தமிழகம்

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று(ஜூன் 6) மாலை முதல் மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதால் புயலாக வலுப்பெற கூடும் என்றும் , தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று(ஜூன் 6) இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடைக்கு முன்பிருந்தே, வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது.

அதிலும் மே மாதம் முழுவதும் மக்கள் மதிய நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்தது. ஆனாலும் , அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்தது.

இந்த நிலையில், இன்று திடீரென வானிலை மாறி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னையில் வடபழனி, கோயம்பேடு, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், சென்ட்ரல், கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை, மெரினா, சேப்பாக்கம், எழும்பூர், கிண்டி, பட்டினம்பாக்கம், புரசைவாக்கம், தியாகராய நகர். சைதாப்பேட்டை, என நகரின் பல முக்கிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தியேட்டர்களில் அனுமாருக்கு முதல் சீட்: ஆதிபுருஷ் அலப்பறை!

தஞ்சை திருமணத்தில் பன்னீருடன் சந்திப்பா? சசிகலா வைத்த ட்விஸ்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0