மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில்,
இன்று மாலை முதல் திடீரென சென்னையில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது.
புரசைவாக்கம்,சென்னை எழும்பூர், சென்ட்ரல், கொடுங்கையூர், கொளத்தூர், அரும்பாக்கம், சேப்பாக்கம் ,அமைந்தகரை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சென்னையில் மழை : வானிலை அப்டேட்!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி செய்யவுள்ள மாற்றங்கள் என்ன?