ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி – எப் 12 ராக்கெட் இன்று(மே29) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
51 புள்ளி 7 மீட்டர் உயரமும், 420 டன் உந்துவிசை எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி – எப் 12 ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி. வரிசையில் 15வது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட்டின் மூலம் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட என்.வி.எஸ்- 01 என்கிற வழிகாட்டும் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த என்.வி.எஸ்- 01 செயற்கைக்கோள் இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் செயற்கைக்கோளாகும். செயற்கைகோளை புவிநிலை சுற்றுப்பாதையில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிறுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு நிலை, வேகம், இடம், நேரம் உள்ளிட்ட தகவலை துல்லியமாக வழங்க முடியும் என கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் மூலம் நிலத்திலும் கடற்பரப்பிலும் பயணிக்கும் இடத்தையும், தொலைவையும் மிகவும் துல்லியமாக கணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே, சொந்த நேவிகேஷன் அமைப்புகளை கொண்ட நாடுகளாக இருக்கும் நிலையில், இந்தியாவும் இந்த செயற்கோளை நிலைநிறுத்துவதன் மூலம் அந்த பெருமையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ருதுராஜூக்கு பதிலாக ஜெய்ஷ்வால்
இந்தியா – ஜப்பான் கூட்டு உச்சி மாநாடு: முதல்வர் கோரிக்கை!