SU Venkatesan MP Thanks to Southern Railway for Two New Trains via Madurai on his Request

மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள்!

மேட்டுப்பாளையத்திலிருந்து தூத்துக்குடிக்கு, ராமேஸ்வரத்திலிருந்து மங்களூருக்கு மதுரை வழியாக இரண்டு புதிய ரயில்கள் இயக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். Two New Trains via Madurai

இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மதுரை மாவட்டத்துக்கு மேலும் இரு புதிய ரயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 29-ம் தேதி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரயில் இயக்குவதற்கும் தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைத்ததுள்ளதாக எனது கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.

தென்மாவட்ட மக்களுக்கும், மேற்கு மாவட்ட மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய இந்த ரயில்களை இயக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன் விளைவாக தற்போது தெற்கு ரயில்வே பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி ஒரு இரவு நேர ரயில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் வாரம் இருமுறை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதைப்போல ராமேஸ்வரத்துக்கும் மங்களூருக்கும் இடையே வாரம் ஒரு முறை ரயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது மதுரை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் மிக முக்கியமானது.

கோவை ரயில் பயணிகள் சங்கமும், மதுரை தூத்துக்குடி பகுதி மக்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு இக்கோரிக்கையை பலமுறை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த இரு ரயில்களுக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, விரைவில் அவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொடுத்த ரயில்வே வாரியத்துக்கும், பரிந்துரை செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒர்க் ஃப்ரெம் ஹோம்: டெல் நிறுவனம் அதிரடி!

பியூட்டி டிப்ஸ்: உங்கள் தலைமுடிக்குப் பிரச்சினையே தராத  ஷாம்பூ இது!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

ஹெல்த் டிப்ஸ்: ரத்தப் பரிசோதனை செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts