கிச்சன் கீர்த்தனா: ஸ்டஃப்டு மஷ்ரூம்

தமிழகம்

அசைவ ருசி வேண்டும். ஆனால், சைவமாக இருக்க வேண்டும்…. இப்படியொரு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கான மெனுவில் மஷ்ரூமுக்கு முக்கிய இடமுண்டு. அப்படி மஷ்ரூமில் செய்து அசத்தக்கூடிய வெரைட்டி இந்த ஸ்டஃப்டு மஷ்ரூம்.

என்ன தேவை?

காளான் – 10 (பெரியது)
பிரெட் தூள் – தேவைக்கேற்ப
முட்டை – ஒன்று
மைதா மாவு – 3 டீஸ்பூன்
டூத்பிக் – சில

ஸ்டஃப் செய்ய:

பெரிய வெங்காயம் – 2
பூண்டு – 10 பல்
கொத்தமல்லித்தழை – சிறிது
பச்சை மிளகாய் – 2
சீஸ் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

காளானை தண்ணீரில் நன்கு கழுவி வைக்கவும். முட்டையை அடித்து மைதா மாவுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கிளறி தனியே வைக்கவும்.

காளானின் தண்டுப் பகுதியை நீக்கிவிட்டு, காளானின் நடுவே வதக்கிய கலவையை ஸ்டஃப் செய்யவும். இறுதியாக சீஸ் துருவல் வைக்கவும். இனி, தண்டு நீக்கிய மற்றொரு காளானை ஸ்டப் செய்த காளானோடு ஒன்றாக இணைத்து டூத் பிக்கால் காளானின் நடுவே படத்தில் காட்டியுள்ளபடி செருகவும்.

இரண்டும் பிரிந்து வராமல் இருக்கவே டூத்பிக்கை செருகுகிறோம். பிறகு, முட்டை-மைதா கலவையில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டவும். வாணலியில் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அடுப்பை சிறு தீயில் வைத்து, ஸ்டஃப் செய்த காளான் துண்டுகளைச் சேர்த்து, பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

ஈஸி மஷ்ரூம் ஃப்ரை

மஷ்ரூம் சுக்கா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *