வாரம் ஒருமுறை வெளியில் சாப்பிட்ட நிலை மாறி, இப்போதெல்லாம் ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடும் பழக்கம் பெருநகரங்களில் மட்டுமல்ல… சிற்றூர்களிலும் சகஜமாகிவிட்டது. அதற்கு முக்கிய காரணம்ம் சாதாரண உணவு வகைக்கும் வித்தியாசமான பெயர்கள் மற்றும் கண்ணைக் கவரும் படங்கள்.
வெளியில் சாப்பிடுவது தவறில்லை. ஆனால், அவை அனைத்தும் ஆரோக்கியமானதா என்று யோசிப்பது நல்லது. இந்த நிலையில் வீட்டிலேயே சமைத்து ருசிக்க இந்த கேப்பேஜ் ரோஸ் ஸ்நாக்ஸ் உதவும்.
என்ன தேவை?
முட்டைக்கோஸ்- 150 கிராம்
வேகவைத்த அரிசி – 50 கிராம்
கைமா செய்த மட்டன் – 25 கிராம்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – 10 கிராம்
மட்டன் எலும்பு வேக வைத்த தண்ணீர் – 1 லிட்டர்
எப்படிச் செய்வது?
கைமா செய்த மட்டனில் உப்பு, மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி போட்டு நன்றாகக் கிளறி வைத்துக்கொள்ளவும். முட்டைக்கோஸை ஒரு நிமிடம் வேகவைத்து, உடனே வடித்துவிடவும். இந்த கோஸ் இலைகளை எடுத்து, வெற்றிலை மடிப்பது போல் மடித்து, மட்டனை அதில் வேகவைத்து மடிக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெயைத் தடவி, மடித்து வைத்து இருக்கும் கோஸ் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். இதன் மேல் மட்டன் எலும்பு வேக வைத்த தண்ணீரை எடுத்து கூம்பு போல் வைத்து இருக்கும் பாத்திரத்தில் வரிசை மாறாமல், மெதுவாக தண்ணீரை ஊற்றி, தீயை அதிகமாக்கி 5 முதல் 10 நிமிடம் கொதிக்கவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
உணவின் மூலம் அல்சரைத் தடுக்கலாமா?