திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு; போலீசார் சொல்லும் புது தகவல்!

Published On:

| By Kumaresan M

சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு,  இரு முறை வாயு கசிவு ஏற்பட்டது.  இதனால், 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பள்ளிக்கு விடுமுறையும் விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். முடிவில்  பள்ளிக்கருகே  வாயுக்கசிவு ஏற்பட சாத்தியமில்லை என்று அறிவித்தனர்.

அதன் பின்னர் நவம்பர் 4ம் தேதி மேலும் 10 மாணவர்கள் மயக்கம், வாந்தி வருவதாக கூறவே அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாணவர்களின் நிலையைக் கண்டு பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்திலும் குதித்தனர்.

இந்த நிலையில், போலீசார் தரப்பில், ‘நடந்த சம்பவத்தை அறிந்து, நாங்களும் விசாரணையை துவக்கினோம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய கள ஆய்வை நடத்தி உள்ளது. பள்ளியிலும், சரி அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள ஆலைகளில் இருந்து எங்கும் வாயுக்கசிவு ஏற்பட வில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சந்தேகம் எல்லாம் மாணவர்கள் மீது திரும்பியுள்ளது.  பள்ளி பாட வேளைகளை புறக்கணிக்க மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து இதுபோன்று நாடகம் ஆடி இருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்கின்றனர்.

இதையடுத்து, 9 நாட்களுக்கு  பிறகு இன்று (நவம்பர் 13)  விக்டரி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர்.

முதல் கட்டமாக பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மற்ற வகுப்பு மாணவிகளுக்கு படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

’மருத்துவரை கத்தியால் குத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ : உதயநிதி உறுதி!

அசோக் செல்வன் நடிக்கும் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ : ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு !

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel