கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் தலைமைக் காவலர் ராமலட்சுமியின் மகள் சத்யாவை, அவர் வீட்டருகே வசித்து வரும் சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளி கொலை செய்தார்.
அக்டோபர் 13 ஆம் தேதி பரங்கிமலை ரயில்நிலையத்தில் நடந்த இந்த கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகளின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தை மாணிக்கமும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒருதலைக் காதலால் செய்த கொலை என்று சத்யா உறவினர்கள் குற்றம் சாட்ட, இருவரும் காதலித்து வந்தோம் என்று கொலையாளி சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தநிலையில் சத்யா கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு நேற்று(அக்டோபர் 14)உத்தரவிட்டார்.
டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில், காவல் ஆய்வாளர் ரம்யா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று சிபிசிஐடி அதிகாரிகள் குழு விசாரணையில் இறங்கி உள்ளது.
முதற்கட்டமாக பரங்கிமலை ரயில்நிலையம் மற்றும் ஆலந்தூர் காவலர் குடியிருப்புகளில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கலை.ரா
பச்சை மையால் பஞ்சாயத்துத் தலைவர்கள் கையெழுத்திடலாமா?: ஆர்டிஐ தகவல்!
நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!