மாணவி சத்யா கொலை: அக்டோபர் 28 வரை சதீஷூக்கு சிறை!

மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷை அக்டோபர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில், மின்சார ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி சத்யாவை நேற்று(அக்டோபர் 13) கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.

சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் செல்போன் சிக்னலை வைத்து துரைப்பாக்கம் அருகே அதிகாலையில் சதீஷ் கைது செய்யப்பட்டார்.

மாம்பலம் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்து சதீஷிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதன்பிறகு இன்று(அக்டோபர் 14) மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

9 ஆவது நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள் முன் சதீஷை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சதீஷின் முகத்தை துணியால் மறைத்து போலீசார் அழைத்து வந்தனர்.

இதனால் அங்கிருந்த வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கொலை குற்றவாளியின் முகத்தை ஏன் மறைத்து அழைத்து வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வழக்கறிஞர்களிடம் இருந்து சதீஷை பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீசார், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிபதி முன் சமர்ப்பித்தனர்.

இதையடுத்து சதீஷை அக்டோபர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி மோகனாம்பாள் உத்தரவிட்டுள்ளார். 

கலை.ரா

சத்யாவை கொன்ற சதீஷையும் ரயிலில் தள்ளிவிடுங்க: விஜய் ஆண்டனி கோரிக்கை!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts