வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் இன்று அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து நாளை ஏமன் ஓமன் இடையே கரையை கடக்க உள்ளது. அப்போது சூறாவளிக் காற்று மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் வரும் 25ம் தேதி வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
இந்த புயல் மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புயல் காரணமாக அக்டோபர் 26 ஆம் தேதி வரை வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
நானி 31 பட டைட்டில் வெளியானது!
மகளிர் உரிமைத் தொகை : அரசின் முக்கிய அறிவிப்பு!
நான்கு நாட்களில் ரூ.400 கோடி… பாக்ஸ் ஆபிஸில் ‘லியோ’ சாதனை!
Asian Para Games: பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு… முதல்வர் பாராட்டு!