புதுச்சேரியில் ஸ்டிரைக்: தமிழக பேருந்துகள் மீது கல்வீச்சு!

Published On:

| By Kavi

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இந்து முன்னணி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து சென்ற பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா மனுஸ்மிருதி பற்றி கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பேசியது சர்ச்சையானது. கடந்த 20 நாட்களாக ஆ.ராசாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து இந்து முன்னணியினர், பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Strike in Puducherry

இதில் ஆ.ராசாவின் உருவ பொம்மை எரிப்பது, செருப்பு மாலை அணிவிப்பது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 27) புதுச்சேரியில் இந்து முன்னணியினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் புதுச்சேரியில் கடைகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. சரக்கு மற்றும் பொது போக்குவரத்து இயங்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்கு இயக்கப்படுகின்றன.

இதில், விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

வில்லியனூர் அரும்பார்த்தபுரம் பகுதி அருகே மர்ம நபர்கள் பேருந்துகளின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பிரியா

அமைச்சர் சேகர்பாபு அண்ணன் தற்கொலை: காரணம் என்ன?

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரம்: அமைச்சர்கள் ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel