வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (அக்டோபர் 22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இது ஒடிசாவுக்கு தென்கிழக்கே 730 கி.மீ., மேற்கு வங்காளத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 770 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக உருமாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே வரும் 24ஆம் தேதி இரவு மற்றும் 25ஆம் தேதி அதிகாலைக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த புயலுக்கும் தமிழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் தேசிய பேரிடர் மீட்பு படையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அந்த மாநிலங்களில் பலப்படுத்தப்ப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
400 கோடி அரசு நிலம் அபகரிப்பு : அறப்போர் இயக்கத்திடம் சிக்கிய அமைச்சர் யார்?
அதிகாலை முதல் கனமழை… விடுமுறை அறிவித்த 2 மாவட்ட கலெக்டர்கள்!