மாநில திட்டக்குழு கூட்டம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை!

மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டத்தில், பணி முடிவுற்ற நிலையில் உள்ள மூன்று கொள்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழக முதல்வரும் மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (அக்டோபர் 27) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, குழு உறுப்பினர் எம்.விஜயபாஸ்கர், டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், உறுப்பினர்கள் மருத்துவர் அமலோற்பவநாதன் மற்றும் சித்த மருத்துவர் கு.சிவராமன்,

ஆகியோர் மாநில திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு சுகாதார நலக்கொள்கை அறிக்கையை வழங்கினார்கள்.

state planning commission policy draft

அதன்படி, மாநிலத் திட்டக் குழுவால் பல்வேறு துறைகளுக்குரிய தயாரிக்கப்பட்ட 10 கொள்கைகளின் பணி முடிவுற்ற நிலையில் உள்ள மூன்று கொள்கைகளான (1) ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை – மின்வாகனம்,

தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா (2) தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை (3) திருநர் நலக்கொள்கைகள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இக்கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர் ஆகியோர் விளக்கினர்.

state planning commission policy draft

அதனைத்தொடர்ந்து தொழில் மயமாதல் கொள்கை குறித்து, மல்லிகா சீனிவாசனும், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து மரு. அமலோற்பவநாதனும், திருநர் நலக்கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட்ராஜும் விவரித்தனர்.

ஜெ.பிரகாஷ்

ரிஷி சுனக்குடன் தொலைபேசியில் பேசிய மோடி!

ட்விட்டர் நிறுவன தலைகளுக்கு ஆப்பு: அதிரடியில் இறங்கிய எலான் மஸ்க்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts