1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
2022-23 கல்வியாண்டுக்கான காலாண்டு அட்டவணையை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடத்தப்படும்.
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் 12 மணி வரை தேர்வு நேரமாகும்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 முதல் 12.30 மணி வரை தேர்வு நேரமாகும்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு காந்தி ஜெயந்தி மற்றும் சரஸ்வதி பூஜைக்கான விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
மோனிஷா
குரூப் 1 தேர்வு: வயது வரம்பு உயர்த்தப்படுமா?
முழுத் தொகையும் செலுத்தியாச்சு- இனி மின்சாரம் வாங்கலாம்! -அமைச்சர் செந்தில்பாலாஜி