பாரத ஸ்டேட் வங்கி கடன் வாங்குபவர்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்தது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை அதிகரித்தன.
வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும் ஒன்றாகும். அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதம் இன்று முதல் (ஆகஸ்ட் 15) அமலுக்கு வந்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி அதன் விளிம்புநிலை நிதி அடிப்படையிலான வங்கிக் கடன் வட்டி விகிதங்களை (எம்.சி.எல்.ஆர்) உயர்த்தியுள்ளது. குறுகியக் கால கடனுக்கான வட்டி விகிதம் 0.20 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
எம்சிஎல்ஆர் எனப்படும் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம், மூன்று மாத கால கடனுக்கு 7.15 சதவிகிதத்தில் இருந்து 7.35 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆறு மாத கால கடனுக்கான வட்டி விகிதம் 7.45 சதவிகிதத்தில் இருந்து 7.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், ஒரு ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.5 சதவிகித்தில் இருந்து 7.70 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.7 % இல் இருந்து 7.9% ஆக உயர்த்தபட்டுள்ளது.
மூன்று ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.8 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வேலையிண்மை, ஜி.எஸ்.டி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு கூடுதல் சுமையைதான் ஏற்படுத்தும்.
மோனிஷா
ஆகஸ்ட் 17 -செப்டம்பர் 2: தொழிற்சாலைகளுக்குக் கடனுதவி சிறப்பு முகாம்!
வட்டியை குறைத்து கடனை கொடுத்து சில மாதங்கள் கடந்த பின் வட்டியை அதிகப்படுத்துவது……… மோடி அவர்களின் ஆட்சி மாடலில் இதுவும் ஒன்று…….