நாங்குநேரி மாணவருக்காக விரையும் ஸ்டான்லி மருத்துவக் குழு: மா.சுப்பிரமணியன்

Published On:

| By christopher

stanley hospital doctors are come to nellai

நாங்குநேரி சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவரின் அறுவைசிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் குழு நெல்லைக்கு வருகை தர உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக கொடூரமாக தாக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது தங்கை இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் இன்று (ஆகஸ்ட் 13) ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ”நாங்குநேரியில் நடந்துள்ள இந்த அசாம்பாவிதத்தை அடுத்து முதல்வர் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் 6 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருவருக்கும் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம்.

இருவருக்கும் அறுவை சிகிச்சையுடன், அவர்களுக்கு தேவையான மன நல ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வரின் உத்தரவின் பேரில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பாதிக்கப்பட்ட மாணவர்களையும், அவர்களது தாயாரையும் சந்தித்து நிதியுதவி வழங்கியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து இன்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சபாநாயகர் அப்பாவு ஆகியோருடன் நானும் நேரில் சென்று மாணவர்கள் இருவரையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம்.

மாணவருக்கு கையில் அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்களை நெல்லைக்கு வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவரின் தாயார் வைத்த கோரிக்கையின் பேரில், வரும் காலங்களில் மாணவருக்கு உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பினை பெற்று தருவதற்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜவான் 2வது சிங்கிள்: காதலில் உருகும் ஷாருக்கான் – நயன் தாரா

நாங்குநேரி விவகாரத்தில் விரைவில் அறிக்கை: எஸ்.சி/எஸ்.டி ஆணையம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share