திண்டுக்கல் மேடையில் ஸ்டாலின் வைத்த கோரிக்கை: தலையசைத்த மோடி

தமிழகம்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடையில் உரையாற்றினார். அதில், “இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த அண்ணல் காந்தியடிகளுக்கும், தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம்.

தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த காந்தியடிகள் தமிழை விரும்பி கற்றவர். வடஇந்தியர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்கவேண்டும், அது தமிழாக இருக்கவேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள்.

அத்தகைய காந்தியடிகள் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமரை வரவேற்கிறோம்.

கல்வியின் வழியாக மனிதரை சமூகத்துக்கு பயனுள்ளவராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்கிறது.

இதை மேலும் உயர்த்த அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் பயில நிதியுதவி என அனைவரும் உயர்கல்வி பெற அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது.

நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, கல்லூரி கனவு போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்” என்று பேசிய முதலமைச்சர், கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடி புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டார்.

அப்போது அதை புரிந்துகொண்டது போல பிரதமர் நரேந்திர மோடி பொறுமையாக தலையசைத்தார்.

மேலும் இசைஞானி என்ற பெருமைமிகு பட்டத்தை வழங்கியவர் கலைஞர். கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற இளையராஜாவுக்கும், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனையும், பட்டம் பெற்ற மாணவர்களையும் வாழ்த்துகிறேன்.

காந்திய நெறிமுறைகளை கடைப்பிடிப்பவர்களாக மாணவர் சமுதாயம் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் பேசினார்.

கலை.ரா

இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் மோடி

காந்தி பல்கலை: வெள்ளை தொப்பியில் மோடி, ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *