டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

Published On:

| By Monisha

tm soundrarajan statue in madurai

டி.எம்.சௌந்தரராஜன் உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 16) திறந்து வைத்தார்.

மதுரை மண்ணில் பிறந்து, இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்து கொண்டவர் டி.எம்.சௌந்தரராஜன். 1950 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் “ராதை நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அன்று முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத பாடகராக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர்.

கருணாநிதியால் 1970 ஆம் ஆண்டு “ஏழிசை மன்னர்” என்ற பட்டம் டி.எம்.சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசனால் “இசைக் கடல்” என்று போற்றப்பட்டார். 2003 ஆம் ஆண்டு டி.எம்.சௌந்தரராஜனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தாலும் இன்றும் பலர் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் டி.எம்.சௌந்தரராஜன்.

டி.எம்.சௌந்தரராஜனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மதுரை முனிச்சாலை தினமணி திரையரங்கு அருகில் அவருக்கு முழுவ உருவ சிலையை நிறுவியுள்ளது தமிழக அரசு.

3 நாள் பயணமாக மதுரை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று டி.எம்.சௌந்தரராஜன் சிலையை திறந்து வைத்தார்.

மோனிஷா

செ பாலாஜி வழக்கு! அரசே அஞ்சும் அதிகாரி நாகஜோதி அதிர வைக்கும் தகவல்கள்!

ஜெயிலருக்கு டிக்கெட்டு… அப்போ மாநாட்டுக்கு… அதாம்ல இது!: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share