ஸ்பெய்னில் ஸ்டாலின் : இந்திய தூதருடன் சந்திப்பு!

Published On:

| By Kavi

ஸ்பெயின் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 29) மாலை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு முதலீடுகளை ஈர்க்கவுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த 28ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் ஸ்பெயின் நாட்டுக்குப் புறப்பட்டார். விமானத்தில் பயணிக்கும் போது டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

அப்போது எடுத்த புகைப்படத்தைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து, ”வானில் நிகழ்ந்த ஆச்சரியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Image

தொடர்ந்து நேற்று மாலை ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டுக்கு சென்றடைந்தார். அவரை ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர்  முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் தினேஷ்  பட்நாயக் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்த பயணம் குறித்து ஸ்டாலின், “ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!.

இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.

Image

தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில், “ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் இன்று நடத்த உள்ளார். இம்மாநாட்டில் தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களை விளக்கி, தமிழ்நாட்டில் முதலீடுகளைப் பெருமளவில் ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுமுறை  பயணமாகச் சென்றுள்ள அவர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தமிழ்நாடு திரும்பவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

முஷ்டபிகுர் ரஹ்மானுக்கு பதிலாக… இளம் வீரருக்கு வலை விரிக்கும் சென்னை?

அமைச்சர் மீதான சூமோட்டோ வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share