ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது இன்று (டிசம்பர் 18) அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது டெல்லியில் வழங்கப்படும். விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், செப்பு பட்டயம், பொன்னாடை வழங்கி கெளரவிக்கப்படும்.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியானது.
இதில் ‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908’ என்ற ஆய்வு நூலை எழுதிய வரலாற்று பேராசிரியரும் எழுத்தாளருமான ஏ.ஆர்.வேங்கடாசலபதிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆ.இரா.வேங்கடாசலபதி ‘அண்ணல் அடிச்சுவட்டில்’, ‘தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை’, ‘ஆஷ் அடிச்சுவட்டில்’ உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்தநிலையில், சாகித்ய அகாடமி விருது பெறும் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக SwadeshiSteam நூலை ஆ.இரா.வேங்கடாசலபதி கொண்டு வந்துள்ள வேளையில், அவரது “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.
கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் ‘எழுச்சி’ எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு என் வாழ்த்துகள், பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அட்லீ நிறம் குறித்து பேசிய கபில் சர்மா… சின்மயி கொடுத்த பதிலடி!
’அம்பேத்கர் பெயரை தான் சொல்லவேண்டும்… சொல்வார்கள்’ : அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்!