பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவியை இரவு நேரத்தில் மது குடிக்க வரும்படி அழைத்த இரண்டு பேராசிரியர்களில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் ஜெபஸ்டின் மற்றும் பால்ராஜ் ஆகியோர் சமூகவியல் துறையில் பேராசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் செப்டம்பர் 4ஆம் தேதி இரவு மது போதையில், தாங்கள் பணிபுரியும் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை அலைபேசியில் அழைத்து ஆபாசமாகப் பேசியுள்ளனர். இது மட்டுமல்லாமல் அந்த மாணவியை தங்களுடன் வந்து மது குடிக்க அழைத்துள்ளனர்.
இதை அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அடுத்த நாள் அந்த மாணவியின் பெற்றோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி பாளையங்கோட்டை காவல்துறையினர் செப்டம்பர் 6-ஆம் தேதி நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, இந்த சம்பவத்தை காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினால், தங்களது மகளின் படிப்பு பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் பின்வாங்கியுள்ளனர்.
இதனைக் கேட்ட காவல் அதிகாரிகள், மாணவியின் பெற்றோர்களின் கோரிக்கையை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக்கொண்டனர்.
இந்த விஷயம் இந்து முன்னணி அமைப்பிற்குத் தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் ஜெபஸ்டின் மற்றும் பால்ராஜை கைது செய்யாவிட்டால், நீதி மன்றத்தை அணுகப்போவதாக காவல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் காவல்துறையின் மேல் அதிகாரிகளுக்குத் தெரியவர, அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பால்ராஜ் மற்றும் ஜெபஸ்டின் ஆகியோர் மாணவியிடம் தவறாகப் பேசியது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தான், நேற்று இரவு ஜெபஸ்டினை காவல்துறை கைது செய்தது. தலைமறைவாக உள்ள பால்ராஜை தேடி வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
36 லட்சம் மக்களுக்கு 20 லட்சம் முத்ரா கணக்குகளா? – கோவையில் குழம்பிய நிர்மலா சீதாராமன்
புலியை கொன்று ரத்தத்தை உதட்டில் வைத்தார்- யுவராஜ் தந்தை யோக்ராஜ் புது கதை!
போர்ட் பிளேருக்கு அந்த பெயர் வந்தது எப்படி தெரியுமா? – பின்னணியில் சுவாரஸ்யம்!