10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழகம்

மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.

தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என்றும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையத்தளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று (மே 19) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. மொத்தம் 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 91.39% சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் மாணவிகள் 94.66 சதவீதமும் மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீத பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12,638 பள்ளிகளில் தேர்வு நடைபெற்ற நிலையில் 3,718 பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1.026 அரசு பள்ளிகள் அடங்கும்.

மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதிய பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

மோனிஷா

கேன்ஸ் விழா: கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்

கோலியின் ருத்ரதாண்டவம் : வாழ்வா சாவா ஆட்டத்தில் பெங்களூரு அபார வெற்றி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *