எஸ்.எஸ்.சி தேர்வு : முக்கிய அறிவிப்பு!

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள MTS (Multi-Tasking (Non-Technical) Staff பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வுக்காக எஸ்.எஸ்.சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

மொத்தம் 11, 409 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இன்றுடன் விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்ற நிலையில் நேற்று எஸ்.எஸ்.சி இணையதளம் முடங்கியது.

இதனால் விண்ணப்பிக்க முடியாமல் தேர்வுக்குத் தயாரானவர்கள் தவித்தனர். அதோடு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை எஸ்.எஸ்.சி நீட்டித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24. 02.2023 என்றும் 26.02.2023 அன்றுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இன்று (பிப்ரவரி 17) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரியா

1427 நாட்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

வாய்ப்பு தந்த இயக்குநர்: ஓரங்கட்டும் மாதவன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts