மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிய ஆட்களை தேர்வு செய்யும் பணியை எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்கிறது. ssc cgl final result
சமீபத்தில் Combined Graduate Level தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதில் காலியாக உள்ள 88, 051 பணியிடங்களுக்கு, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 9 முதல் 26 வரை முதற்கட்ட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 18,19,20,31 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற்றது.
இந்தநிலையில், Combined Graduate Level இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை ssc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.