ஸ்ரீவில்லிப்புத்தூர் பிரசித்திபெற்ற குடைவரைக்கோவிலில் நேற்று (பிப்ரவரி 16) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மூவரைவென்றான் கிராமத்தில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த குடைவரைக் கோவில் உள்ளது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவிலானது இந்தியாவில் உள்ள ஏழு குடைவரைக் கோவிலில்களில் ஒன்றாகும்.
இந்த கோவிலானது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
நேற்று இரவு திடீரென குடைவரைக்கோவில் மலை அடிவாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது மலை முழுவதும் பற்றி எரிந்தது.
உடனடியாக வத்திராயிருப்பு தீயணைப்புத்துறை மற்றும் கிராம மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை மற்றும் கிராம மக்கள் முயற்சியால் தீ கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
நாளை சிவராத்திரி நடைபெற உள்ள நிலையில் குடைவரைக்கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
யூடியூப் புதிய சி.இ.ஓ: யார் இந்த நீல் மோகன்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!