ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று (ஜூலை 22) காலை துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலானது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தையொட்டி ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நடைபெறும்.
இந்த வருடத்திற்கான ஆடிப்பூர திருவிழா ஜூலை 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
காலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆண்டாள் – ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர். காலை 8 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவங்கி வைத்தனர்.
தேரோட்ட விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளர்.
செல்வம்
செந்தில் பாலாஜி இல்லாத முதல் அமைச்சரவை கூட்டம்!
மழையில் நனையும் கீர்த்தி ஷெட்டி: வைரல் புகைப்படம்!
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!