தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை மாத பூபதித் திருநாள் திருத்தேரோட்டம் இன்று (பிப்ரவரி 3) கோலாகலமாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான தை தேர்த்திருவிழா கடந்த ஜனவரி 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 29ஆம் தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.
வியாழக்கிழமை மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் உத்திர வீதிகளில் உலா வந்து, தைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்றது.
இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து அதிகாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை ரதரோஹணம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் தெற்கு உத்திர வீதியிலிருந்து புறப்பட்டு மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி மற்றும் கிழக்கு உத்திரவீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
சக்தி
ஈபிஎஸ் ஓபிஎஸ் -கட்டாய கல்யாணம்: உச்ச நீதிமன்ற கருத்து பற்றி செம்மலை சீற்றம்!
ஷாருக்கான் – டாம் குரூஸ் ஒப்பீடு : அமெரிக்கா எழுத்தாளரை வச்சு செய்த ரசிகர்கள்!
எனது மகன் பணியை தொடர்வேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்