ஸ்ரீரங்கம் கோயில் தணிக்கை வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

தமிழகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கணக்கு வழக்குகளை மத்திய கணக்கு தணிக்கைத் துறை மூலம் தணிக்கை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வரவு-செலவு கணக்கு விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலமாக தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

மேலும் அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை நிர்வகிக்கும் நிர்வாகிகள் முறையாக நிர்வகிக்கவில்லை.

எனவே கோயில் நிர்வாகத்தை முழுமையாக மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 14) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கணக்கு வழக்குகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தணிக்கை செய்து வருவதால், மத்திய கணக்கு தணிக்கைத் துறையினரைக் கொண்டு தணிக்கை செய்ய உத்தரவிட முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ’ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் முழுமையாக மாற்றப்பட்டு விட்டதால் இந்த வழக்கு செல்லாததாகிவிட்டது, கோயில் நிர்வாகம் முழுவதையும் மாற்றியமைக்க உத்தரவிட முடியாது’ என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெ.பிரகாஷ்

டீசர் வெளியீடு: ரத்தவாடை வீசும் ’தலைநகரம் 2’!

5ஜி சேவை: குஜராத்தில் 30 நகரங்கள்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *