சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கங்கா பூர்வாலா கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஆர் மகாதேவன் நியமிக்கப்பட்டர். பின்னர் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனால் மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்தார்.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் கல்பாத்தி ராஜேந்திரனை நியமித்து குடியரசுத் தலைவர் இன்று (செப்டம்பர் 21) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெல்லி, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, கேரளம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
யார் இந்த ஸ்ரீராம்?
மும்பையில் பிறந்த இவரது பூர்வீகம் கேரளா. பி.காம் மற்றும் எல்எல்பி படிப்புகளை படித்து, 1986ஆம் ஆண்டு ஆண்டு மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
2016ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா