எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நாகையில் இருந்து கடந்த 4 தினங்களுக்கு முன்பு சுமார் 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். இன்று (டிசம்பர் 21) முற்பகல் 12 மணியளவில் இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும் தமிழக மீனவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரும் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியும் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கற்கள் மற்றும் கம்புகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்ததுடன் 12-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
சிரிப்பு, அழுகை இரண்டும் கூடாது: இது எங்கு தெரியுமா?
மதுரை சரவணா ஸ்டோருக்கு தடைகேட்டு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!