கிச்சன் கீர்த்தனா: மீன் சொதி

Published On:

| By Selvam

கடலும் கடலைச் சார்ந்த பகுதிகளிலும் வசிப்பவர்களின் விருந்து விசேஷங்கள் என்றால் மீன் சொதி நிச்சயம் இடம்பெறும். இலங்கையின் சிறப்பு உணவாகக் கருதப்படும் இந்த சுவையான மீன் சொதியை நீங்களும் வீட்டிலேயே சமைத்து இந்த வீக் எண்டை கொண்டாடுங்கள்.

என்ன தேவை?

கெட்டியான தேங்காய்ப்பால் – 2 கப்
மீன் – அரை கிலோ
தக்காளி – சிறியது ஒன்று
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – சிறியது ஒன்று
பூண்டு – 4 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும். தேங்காய்ப்பால், புளிக் கரைசல் தவிர்த்து, மீனையும், மற்ற பொருள்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, மீன் முக்கால் பதம் வேகும்வரை அடுப்பில் விடவும். பின்பு தேங்காய்ப்பால், புளிக்கரைசல் சேர்த்து, மீன் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல்

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி சட்னி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share