பிரியா மரணம்: வழக்கின் பிரிவுகள் மாற்றம்!

தமிழகம்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான வழக்கின் பிரிவுகளை போலீசார் மாற்றியுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, பெரியார் நகர் மருத்துவமனையில் மூட்டு சவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவரது காலில் வீக்கம் ஏற்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரியாவின் வலது காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டதால் அவரது வலது கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பலனிக்காமல் கடந்த நவம்பர் 15-ஆம் தேதி பிரியா உயிரிழந்தார்.

sports player priya death case section change

பிரியாவிற்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெரியார் நகர் மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோம சுந்தரம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கையை பெரவள்ளூர் காவல்துறையிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் நேற்று ஒப்படைத்தது.

இந்தநிலையில், கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான வழக்கின் சட்ட பிரிவுகளை காவல்துறையினர் மாற்றம் செய்துள்ளனர்.

முன்னதாக சி ஆர் பி சி 174(3) – சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்திருந்த காவல்துறையினர், தற்போது ஐபிசி 304(a) – கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என மாற்றியுள்ளனர்.

சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்து கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு கவனக்குறைவான சிகிச்சையளித்த மருத்துவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து: கே.பாலகிருஷ்ணன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1