கிச்சன் கீர்த்தனா : கீரை சாதம்

தமிழகம்

பொன்னாங்கண்ணிக்கீரை சருமத்துக்கும் கண்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் மதிய உணவுக்கு இந்த கீரை சாதத்தைச் செய்து கொடுத்து அனுப்பலாம்.

என்ன தேவை?

பொன்னாங்கண்ணிக்கீரை – ஒரு கப்
புழுங்கலரிசி – 200 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று (பெரியது)
பூண்டு – 5 பல்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் – ஒன்று
சாம்பார் பொடி – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய்  – 4 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கீரையைச் சுத்தம் செய்து நீரில் அலசி, எடுத்து வைக்கவும். அரிசியையும் பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் தண்ணீரீல் ஊற்றி ஊறவைக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதங்கும்போதே பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு, ஒன்றிரண்டாக தட்டிய பூண்டு மற்றும் சீரகத்தூள், சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இத்துடன் கீரையைச் சேர்த்து லேசாக வதக்கி, ஊறிய அரிசி, பருப்புக் கலவை, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரை மூடி வெயிட் போட்டு 3 விசில் வந்த பிறகு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக்  கலக்கிவிட்டுப் பரிமாறவும்.

குறிப்பு: சிறுகீரை, தண்டுக்கீரையிலும் இந்தச் சாதம் செய்யலாம். இந்தச் சாதம் சாப்பிடும்போது உதிராக இருக்க வேண்டும். அதற்கேற்ப விசிலை முடிவு செய்து கொள்ளுங்கள்.

கீரை பணியாரம்

தினை கீரை சாதம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *